Ad Code

Responsive Advertisement

ஷூட்டிங்கே முடியல ஆனா இத்தனை கோடி லாபமா..? இதுதான் பவர் ஆஃப் தளபதி


அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 63வது  படத்தில் நடித்து வருகிறார். கால்பந்தாட்டம் தொடர்பான கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இத்திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 130 கோடி என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜயின் திரைப்படம் என்பதால் இதனை வாங்க போட்டா போட்டி நிலவி வருகிறது.

மேலும் அந்த விற்பனை நிலவரங்கள் குறித்த தகவலும், வலைப்பேச்சு யூட்யூப் சேனல் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட சேனல் வெளியிட்ட தகவலின் படி, சேட்டிலைட் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் சுமார் 50 கோடிக்கும், ஹிந்தி ரைட்ஸ் 30 கோடிக்கும், ஓவர்சீஸ் ரைட்ஸ் 25 கோடிக்கும், தமிழக விநியோக உரிமை 75 கோடிக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.

இதன் மூலமே 50 கோடி ரூபாய் லாபம் எனும் நிலையில்,
தயாரிப்பு நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக திரைத்துறையில் செய்தி உலாவருகிறது.