அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் படங்களின் ரிலீஸ் மட்டுமல்லாது, அவை குறித்த ஒவ்வொரு சிறு தகவலையும் திருவிழா போல கொண்டாடுவது ரசிகர்களிடையே வழக்கமான ஒன்றாகி இருக்கிறது.
அந்த வகையில், 'தளபதி 63' திரைப்படம் குறித்த தகவல் ஒன்றும் ரசிகர்களால் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 63.
கால்பந்து விளையாட்டு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் இரு பாடல்கள், மின்னல் வேகத்தில் தயாராகி வருகிறது. இந்த பணிகளை மேற்பார்வை இட, இயக்குனர் அட்லீ இசைப்புயல் A.R. ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு செல்ல, இந்த தகவலை இசைப்புயல் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Look who is here 😊I am the first to see ... edit of two songs 👍🔥🔥 pic.twitter.com/obUmUvQ94z— A.R.Rahman (@arrahman) June 4, 2019
Social Plugin