Ad Code

Responsive Advertisement

'தளபதி-63' படக்குழுவை பார்த்து கத்துக்கோங்க..! போனிகபூர் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்


'தளபதி-63' படக்குழு அறிவிப்பு ஒவ்வொன்றையும் பக்கா பிளானோடு வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வரும் நிலையில், 'போனிகபூரின் நேர்கொண்ட பார்வை பட செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை' என அஜித் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

நடிகர் விஜயின் திரைப்படங்கள் தியேட்டரில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் சாதனை படைக்கவேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு செயலும் பார்த்து பார்த்து செய்யப்படும்.

இதன் காரணமாகவே சமூக வலைதள ட்ரெண்டுகளிலும் அசைக்க முடியாதவராக நடிகர் விஜய் இருக்கிறார். இந்த வழக்கம் தளபதி 63 படத்திலும் பின் பற்றப்படும் நிலையில், இத்திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் அதற்கு முன்னதாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்பட ட்ரைலரை விட தளபதி 63 அதிகம் பேசப்பட்டு இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்கள்,

'தளபதி 63 படக்குழுவை போல, இனி நேர்கொண்ட பார்வை அப்டேட் ஒவ்வொன்றையும் முன்னதாக அறிவித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்' என அதிருப்தியுடன் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.