Ad Code

Responsive Advertisement

'தளபதி 63' சுட்ட கதைதான்..! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட அட்லீ


'தளபதி 63' திரைப்படம் பிரபல பாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்பதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க காத்திருக்கின்றனது அத்திரைப்படக்குழு.

இயக்குனர் அட்லீயின் படங்கள் என்றாலே, பல படங்களை தழுவி எடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவரது முந்தைய படங்களினால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதன் காரணமாக இவரது படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்திலும் வந்துவிடாமல் இருக்க,

முன்னெச்சரிக்கையாக அத்திரைப்பட கதை உருவாக்கத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்த ஷாருக் கானின் 'சக்தே இந்தியா' திரைப்படத்தின் ரீமேக் உரிமையை தளபதி 63 படக்குழு வாங்கி இருக்கிறது.