Ad Code

Responsive Advertisement

அறிவிப்புக்கு முன்னரே லீக்கான 'தளபதி-63' பட டைட்டில்..! படக்குழுவினர் அதிர்ச்சி


'தமிழ் ராக்கர்ஸ்' போன்ற இணையதளங்கள் ஒருபுறம் வெளிவந்த முதல்நாளிலேயே புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து கொண்டு இருக்க, அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே படங்கள் குறித்த தகவலை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது மற்றொரு கும்பல்.

காலா, சர்கார், பேட்ட, 2.0 என பிரமாண்ட படங்களே இவ்வித பிரச்சனையில் சிக்கி தவித்த நிலையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63 வது படத்தின் தலைப்பும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக தளபதி 63 படத்தலைப்பு ஜூன் 21 மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது படக்குழு. இதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சொன்ன நேரத்திற்கு முன்பாகவே, 'அப்படத்தின் டைட்டில் இதுதான்' என ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.