தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்பு போல முன்னணியில் இல்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு சில பட வாய்ப்புகளை கையில் வைத்து இருப்பவர் நடிகை தமன்னா.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தேவி 2' திரைப்படம் முதல் பாகம் அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், ஒரே பாடலில் ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டி, ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
பிற நடிகைகளை போல பெரும்பாலும் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து நல்ல பொண்ணு என பெயர் எடுத்த இவர், சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றின் மூலம் நாங்க எல்லாம் அப்பவே அப்படி என கூறி அதிர வைத்து இருக்கிறார்.
குறிப்பிட்ட நேர்காணலில், ஆபாச படம் பார்த்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்ப, பள்ளி படிக்கும் போது தோழியின் வீட்டில் ஒருமுறை தவறுதலாக ஆபாச படத்தை பார்த்ததாகவும், தோழியின் பெற்றோர் அவ்வித படங்களை தரவிறக்கம் செய்து வைத்து இருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்தேறியதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
Social Plugin