நடிகை தமன்னா கார்த்தியை அடுத்து காதல் சர்ச்சைகளில் அதிக அளவில் சிக்காமல் இருந்து வருகிறார்.
இப்படி இருக்க 'என்னுடைய டார்லிங்' என்ற தலைப்பை கொண்ட இவர் சமூக வலைத்தள பதிவை கண்டு குஷியான கிசு கிசு பிரியர்கள், அதில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தால் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.
நாயகிகள் என்றாலே ஒருவருக்கொருவர் எலியும் பூனையும் போன்றவர்கள் என்பது திரையுலகில் எழுத்தப்படாத விதியாக இருந்து வருகிறது.
இப்படி இருக்க எந்த வித போட்டி மனப்பான்மையும் இன்றி மிகவும் நட்பாக பழகி வருகின்றனர் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால். திரைக்கு அப்பாலும் நெருங்கிய தோழிகளான இவர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கொஞ்சி கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்தேறி இருக்கிறது.
இந்நிலையில், விரைவில் நடிகை காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனையொட்டி அவரது பிறந்தநாள் சிறப்பு புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா என்னுடைய டார்லிங்கின் பிறந்தநாளை ஸ்டைலாக கொண்டாடுவோம் எனவும் பதிவிட்டு இருக்கிறார்.
Here's the common DP for my darling @MsKajalAggarwal's birthday! Let's celebrate it in style 💃💃🎈💖💖 pic.twitter.com/iLQQ0bxwa1— Tamannaah Bhatia (@tamannaahspeaks) June 17, 2019
Social Plugin