Monday, 24 June 2019

காதலன் வீடு அருகிலேயே, புது வீடு வாங்கிய தமன்னா..! விலையை கேட்டால் வாயை பிளப்பீங்க


மும்பை வெர்சோவா பகுதியில் நடிகை தமன்னா புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்பு போல ஜொலிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகிறார் நடிகை தமன்னா.

இவர் மும்பையில் தனது கனவு இல்லத்தை கோடிகளை கொட்டி வாங்கி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையின் வெர்சோவா பகுதியில் அமைந்துள்ளது 'லாவிஸ் சீ வியூ அபார்ட்மெண்ட்'.

குறிப்பிட்ட அபார்ட்மென்டின் 14வது மாடியில் அமைந்துள்ள, பிளாட்டினை சுமார் 16 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறாராம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் நான்கு புற ஜன்னல்களில் இருந்தும் மும்பை கடற்கரையின் அழகை ரசிக்க முடியும்.


இதற்காகவே நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையை விட 4 மடங்கு அதிகம் கொடுத்து இதனை தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறார் நடிகை தமன்னா.

மேலும் இன்னொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், பாகுபலி திரைப்படத்தின் போது தன்னுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரபாஸ் வீடு, இங்கிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பதாகவும்.  
Disqus Comments
'