Breaking News

சூர்யாவுக்கு இருக்கும் பொறுப்பு 'விஜய்-அஜித்துக்கு' இல்லையே! விமர்சிக்கும் திரையுலகம்


தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளமானது அவர்களின் முந்தைய படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.  இதன் காரணமாகவே அட்டர் பிளாப் படங்களுக்கு கூட, நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வெற்றி விழா கொண்டாடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஏன் தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படம் தோல்வி அடைந்தால் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. இப்படி இருக்க நடிகர் சூர்யாவின் சமீபத்திய நடவடிக்கை திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'NGK' குழப்பமான திரைக்கதை காரணமாக, மசாலா சினிமா பிரியர்களை கவராத இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களால் தாளித்து எடுக்கப்பட்டது.

மறுபுறம் கதையை புரிந்து கொண்டவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டினாலும், நடிகர் சூர்யா நெகட்டிவ் விமர்சகர்களின் கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறி, படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

இவரது இந்த நடிவடிக்கை, திரையுலகம் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பாராட்டுகளை பெற்று இருப்பதோடு, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் இப்படி ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்கும் என பேசப்படவும் வைத்துள்ளது.