நடிகர் தனுஸினால் தமிழ் சினிமாவுக்கே கிடைத்த கௌரவம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்தியா என்றாலே பாலிவுட் சினிமா மட்டும்தான் என்று எண்ணிக்கொண்டிருந்த வெளிநாட்டு சினிமா ரசிகர்களுக்கு, கோலிவுட் என்ற ஒன்றும் இருக்கிறது என தனது 'கொலவெறி' பாடலின் மூலம் தெரியப்படுத்தியவர் நடிகர் தனுஷ்.
அதனை அடுத்து ஒரு நடிகராக, பாடகராக பிரமாண்ட உயரத்தை அடைந்து விட்ட தனுஷ், 'தி எக்ஸ்டராடினாரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து உலக சினிமாவில் காலடி எடுத்து வைத்து விட்டார்.
இந்த திரைப்படம் இப்பொழுது பக்கிரி எனும் பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், பிரான்சில் இப்படம் வெளியான போது தனது நடிப்பை பாராட்டும் விதமாக ஒட்டுமொத்த திரையரங்குக்கு எழுந்து நின்று கைதட்டி அற்புதமான நிகழ்வு குறித்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிகழ்வு நடிகர் தனுஷிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் கௌரவம் சேர்த்துள்ள நிகழ்வாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
Social Plugin