மஃப்டி கன்னட திரைப்பட தமிழ் ரீமேக்கிற்கான சிம்புவின் புதிய தோற்றம் புகைப்படமாக வெளியாகி உள்ளது.
ஹன்சிகாவுக்காக சிறப்பு வேடத்தில் சிம்பு தோன்றி இருக்கும் மஹா திரைப்படத்தை அடுத்து கன்னடத்தில் சக்கை போடு போட்ட மஃப்டி திரைப்பட தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு.
மாபெரும் டானாக அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், அத்திரைப்படத்திற்கான டெஸ்ட் போட்டோசூட் அண்மையில் நடைபெற்றது.
கருப்பு நிற உடை, சாம்பல் நிற லுங்கி என கிட்டத்தட்ட காலா திரைப்படத்தில் ரஜினியின் தோற்றத்தை காப்பி அடித்தது போலவே அதில் சிம்பு தோன்றி இருந்த நிலையிலும், சிம்பு ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Social Plugin