Ad Code

Responsive Advertisement

ஒரு லட்சம் தருகிறேன் ப்ளீஸ்..! நடிகையை பப்ளிக்காக படுக்கைக்கு அழைத்த ரசிகரால் பரபரப்பு


தமிழ் சினிமாவில் தொடர்ந்து #MeToo பிரச்சனைகள் தலைவிரித்து ஆடி வருகிறது. இயக்குனர், நடிகர்கள் என பிரபலங்கள் ஒரு புறம் என்றால் ரசிகர்களின் பாலியல் தொந்தரவுகளையும் எதிர்கொள்ளும் நிலைக்கு நடிகைகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இப்படி, அண்மையில் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தால் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்பட புகழ் ஷாலு சம்மு.

இதனால் இவருக்கு எக்கச்சக்க பிரபலமும் கிடைக்க படவாய்ப்புகள் வந்து குவிய துவங்கி இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஷாலு.  

வழக்கம் போல ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்களில் ஒருவர் எல்லை மீறியது குறித்து தெரிவித்து இருந்தார். குறிப்பிட்ட ரசிகர் 'ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்' தருவதாக தொடர்ந்து தன் பதிவுகளில் கமெண்ட் செய்து வந்ததாகவும், அவரை பிளாக் செய்தாலும் புது ஐடியில் வந்து தொல்லை தருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.