நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது குழந்தையை ஈன்றெடுக்க உள்ள நிலையில், அவரது சீமந்தம் கோலாகலமாக நடைபெற்றது.
வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து ஓரிரு படங்கள் நடித்த பின்பு நீண்ட நாள் தோழரை திருமணம் செய்து கொண்ட சமீரா, தற்பொழுது இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் போது பெரும்பாலான நடிகைகள் வெளியே தலை காட்டவே அஞ்சும் நிலையில், சமீராவோ தனது கருவை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவரது சீமந்தம் சில நாட்களுக்கு முன்னதாக கோலாகலமாக நடைபெற்றது. சிரிப்பு, விளையாட்டு, கேலி என கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் காணொளிகளை சமீரா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
Social Plugin