பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் சஹோ. த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதன் ரிலீஸை ஒட்டி, நடிகர் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்பட ரிலீஸ் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்த நேர்கொண்ட பார்வை, ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.தற்பொழுது சகோ திரைப்படமும் ஆகஸ்டில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது நேர்கொண்ட பார்வை வசூலை பாதிக்காமல் இருக்க, அதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றது.
அதன் படி நேர்கொண்ட பார்வை அறிவித்ததை விட முன்னதாக ஜூலை 25ம் தேதி, அஜித்தின் வியாழன் செண்டிமெண்ட் படி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Plugin