Breaking News

கடின உழைப்பின் அடையாளம் இவர்..! பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார்..


சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவில் சாதித்தவர்கள் மிக மிக குறைவு. அப்படி ஜெயித்த ஒரு சில நடிகர்களுள் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒருவர்.

பேருந்து நடத்துனராக இருந்து இன்று உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே முழுமுதற் காரணம்.

இந்நிலையில், இப்படிப்பட்டவரின் கடின உழைப்பை அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ள 5ம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி குறித்த குறிப்புகள் இடம்பெற்று உள்ளது.

'குடிசை முதல் கோட்டை வரை' எனும் தலைப்பில் ஏழ்மையில் இருந்து உச்சம் தோட்ட சாதனையாளர்கள் உடன் நடிகர் ரஜினிகாந்தும் இடம்பெற்றிருக்கும் இந்த பாடக்குறிப்பு ரஜினி ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.