சென்னையில் உள்ள தீம் பார்க்கில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களை பதற வைத்துள்ளது.
சென்னையிலுள்ள பூந்தமல்லி பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குயின்ஸ் லாண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 18ம் தேதி அதில் இடம்பெற்றுள்ள ஃப்ரீ ஃபால் எனும் ராட்டினத்தில் ஏற்பட்ட விபத்து பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்து இருக்கிறது.
சுமார் 100 அடி உயரத்தில் இருந்து, அதிவேகத்தில் கீழ் இறங்கும் குறிப்பிட்ட ராட்டினம், முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில், பாதியிலே அறுந்து விழுந்தது.
Rope cut while on ride in Queensland on 18.06.19.😟😱#queesland#freefall@itisprashanth @cinemapayyan @VettriTheatres @GaneshCinemas pic.twitter.com/goPVlEPWEs— Santhanam (@santhanam_offl) June 19, 2019
விபத்தில் சிக்கியவர்கள் நிலை, உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விபத்தின் காணொளி மட்டும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக சென்ற வருடம், இதே தீம் பார்க்கை சேர்ந்த மற்றொரு ராட்டினம் விபத்துக்கு உள்ளாகி வடமாநில பணியாளர் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து எந்த ஊடகங்களிலும் செய்தி வெளியாகாத நிலையில், பாதுகாப்பற்ற இந்த தீம்பார்க் குறித்து பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விட்டுட்டு வருகின்றனர்.
Social Plugin