Wednesday, 19 June 2019

இது என்ன காக்கி டவுசரு..? மீண்டும் கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ரா


இந்திய சினிமாவிலேயே உச்ச நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உடை மீண்டும் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரை மணந்து முழு அமெரிக்க பெண்மணியாகிவிட்டார். என்றாலும் தொடர்ந்து இந்திய பத்திரிகைகளில் தலைப்பு செய்தி ஆகிவருகிறது அவர் அணியும் வித்யாசமான உடைகள்.

முன்னதாக கரெண்ட் ஷாக் அடித்ததை போல, கலைந்த ஹேர் ஸ்டைலுடன் அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பலரது நகைப்புக்கு ஆளானார் ப்ரியங்கா சோப்ரா.


என்றாலும் என் உடை என் விருப்பம் எனும் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வரும் அவர், அண்மையில் பள்ளிகள் மாணவர்கள் அணியும் காக்கி நிற டவுசரில் தோன்றி இருக்கிறார்.

இதனை கண்ட நெட்டிசன்கள் பலர், பிரியங்கா சோப்ரா RSS இயக்கத்தில் இணைந்து விட்டதாக கிண்டல் செய்து வருகின்றனர்.


Disqus Comments
'