Ad Code

Responsive Advertisement

ஒல்லி நடிகரால் நொந்த இயக்குனர்...! இப்படியும் கிளம்பிய பிரச்சனை


திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட அந்த ஒல்லி நடிகர், கிசு கிசு போன்ற விஷயங்களில் அவரது பெயர் அடிபட்டாலும்  நடிப்பில் எந்த வித குறையும் வைத்து விடாமல் கச்சிதமாக செய்து கொடுப்பவர்.

இவரது இந்த பங்சுவாலிட்டி பிடித்து போய், இவரது படங்களைதயங்காது தயாரிக்க முன்வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனால் இவர் தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தில், இவரால் புதுவித பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது.

இரட்டை வேடங்களில் அவர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்திக்காக ஒல்லி நடிகரை கொஞ்சம் குண்டாக வேண்டி கேட்டிருக்கிறார் இயக்குனர்.

நடிகரும் எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் எடை சற்றும் கூடிய பாடில்லை, இதனால் வேறுவழியின்றி தாடி, முடி, உடை என சில மாற்றங்கள் செய்து அந்த இரண்டாம் காதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கின்றனர்.