தல தளபதி ரசிகர்களின் சண்டை நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு மாபெரும் உச்சத்தை எட்டியது. இந்நிலையில் விவரம் தெரியாமல் வாய் கொடுத்து தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் பிரபல மலையாள நடிகை ஒருவர்.
ஒரு ஆதார் லவ் திரைப்படத்தில், நாயகியாக நடிக்க வந்து, ப்ரியா பிரகாஷ் வாரியார் பிரபலத்தால் துணை நடிகை ஆக்கப்பட்டவர் நடிகை நூருல் ஷெரிப்.
இவரிடம் நேற்று ட்ரெண்டான 'வண்டுமுருகன் அஜித்' என்ற ஹேஷ்டாக்கை மையப்படுத்தி, அஜித்தை கலாய்க்கும் விதத்தில் கேள்வி எழுப்பி இருந்தார் ரசிகர் ஒருவர்.
இதனை சீரியசாக எடுத்துக்கொண்டாரோ அல்லது அவரும் இணைந்து கலாய்த்தாரோ தெரியவில்லை, வண்டுமுருகன் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என பதிலளித்து விட்டார்.
அவ்வளவு தான், கொதித்தெழுந்த ரசிகர்கள் பலர், இப்பொழுது அந்த நடிகையை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.
Social Plugin