வடிவேலுவை வைத்து படம் இயக்க நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்வந்த நிலையில், அவரது கண்டிஷனை கண்டு கதிகலங்கி தங்களது முடிவை மாற்றிக்கொண்டு இருக்கிறது.
கோலிவுட்டில் தொடர் சர்ச்சைகளுக்கு பிறகு, அவரை திரைப்படங்களில் இனிமேல் பார்க்க முடியாது எனும் நிலை ஏற்பட்டு உள்ளது.
என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளத்தையும், 'விரைவில் நெட்ப்ளிஸில் நடிக்கப்போகிறேன்' என அவர் அளித்திருந்த பேட்டியையும் கண்டு, தாங்களாகவே முன்வந்து வடிவேலுவிடம் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அவரை வைத்து, பல திரைப்படங்களை இயக்க தாங்கள் முடிவு செய்து இருப்பதை, வடிவேலுவிடம் தெரிவித்து, ஒப்பந்தம் வரை சென்றது அந்நிறுவனம்.
ஆனால் நடிகர் வடிவேலோ, 'என்னை வைத்து எத்தனை படம் வேண்டுமானாலும் இயக்கி கொள்ளுங்கள். ஆனால், அட்வான்ஸ் தொகையாக ஒரு பத்து கோடியை கொடுங்கள்' என தமிழ் சினிமா பாணியில் கண்டிஷன் போட்டிருக்கிறார்.
ஆனால் கணக்கில் பெர்ஃபெக்ட்டாக இருக்கும் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனமோ, வடிவேலுவின் கண்டிஷனுக்கு மறுப்பு தெரிவித்து, அவரது முடிவை மாற்றிக்கொண்டால் ஒழிய இந்த படம் உருவாக வாய்ப்பில்லை என தடாலடியாக பின்வாங்கி இருக்கிறது.
Social Plugin