Tuesday, 11 June 2019

விஜய்க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல அஜித்...! போனிகபூர் அதிரடி


தல தளபதி ரசிகர்கள் சண்டை ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் இருதுருவங்களான இவர்களது படங்களுக்கு மார்க்கெட்டும் இந்த ரசிகர்களால் உச்சத்தில் உள்ளது.

சிறு சிறு விஷயத்திலும் ஒருவருக்கு மேலே இன்னொருவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்த ரசிகர்களிடையே மேலோங்கி இருந்து வருகிறது. இப்படி இருக்க, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரும் இதே மன நிலையில் இருப்பதாக கிசு கிசுகின்றன கோலிவுட் வட்டாரங்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயர்வைக்கப்படாத திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தின் தமிழக தியேட்டரிக்கல் ரைட்ஸ் 75 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மறுபுறம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் விற்பனை குறித்த பேச்சுவார்த்தையம் நடைபெற, விநியோகஸ்த உரிமையை பிரபல நிறுவனம் 70 கோடிக்கு கேட்டதாக தெரிகிறது.

இதனை ஏற்காத போனிகபூர், 'விஜயின் படம் 75 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது, அவருக்கு இணையான மார்க்கெட்டுடன் அஜித் இருப்பதால்  75 கோடிக்கு ஒரு பைசா குறைந்தாலும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை கொடுக்க மாட்டேன்' என போனிகபூர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();