Tuesday, 11 June 2019

விஜய் படத்தை ஹிந்தியிலும் ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்... வேண்டுகோள் விடுக்கும் பாலிவுட் ரசிகர்கள்


என்னதான் வெளியே தென்னிந்திய படங்களை வட இந்தியர்கள் கலாய்த்து தள்ளினாலும், அங்கே வெளியாகும் பெரும்பாலான படங்கள் தென்னிந்திய மொழி படங்களின் ரீமேக் என்பது கசப்பான உண்மை (வட இந்தியர்களுக்கு).

 ஒரு சிலரே இப்படி, ஆனால் பெரும்பாலான பாலிவுட் ரசிகர்கள் தென்னிந்திய மொழி படங்களையும் விரும்பி பார்க்கும் பழக்கமுடையவர். அதற்கு உதாரணம் தமிழில் பிளாப் ஆன விவேகம் பாலிவுட்டில் ஹிட் அடித்தது.

இப்படி இருக்க, நடிகர் விஜயின் படம் ஒன்றினையும் ஹிந்தியில் ரிலீஸ் செய்ய கோரி வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்  பாலிவுட் ரசிகர்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் மெர்சல். கடந்த 2017ம் ஆண்டு ரிலீஸ் ஆன இத்திரைப்படத்தின் தெலுங்கு டப் வெர்சன் யூட்யூபில் 4 நாட்களுக்கு முன் வெளியானது.

4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சக்கை போடு போட்டு வருகிறது. இதனை கண்ட பாலிவுட் ரசிகர்கள், மெர்சல் திரைப்படத்தை ஹிந்தியிலும் வெளியிடக்கோரி கமெண்ட் வழியாக வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();