Wednesday, 19 June 2019

மகன் முன்பு அணியும் உடையா இது..? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்


நடிகை மல்லிகா அரோரா, மகன் உடன் இருந்த போது கவர்ச்சியான உடையில் தோன்றி இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

பாலிவுட்டில் பிரபல திரைப்பட நடிகையாக வலம்வருபவர் மல்லிகா அரோரா, இவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் மூத்த தார மகன் அர்ஜுன் கபூரை விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இருவரும் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், தனது மகனோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மல்லிகாவின் புகைப்படங்களும் அண்மையில் வெளியானது.

வழக்கம் போல இதிலும் கவர்ச்சியான உடையில் அவர் தோன்றி இருக்க, மகன் உடன் இருக்கும் போது கூடவா இவ்வாறு உடை அணியவேண்டும் என ரசிகர்கள் விமர்சிக்க துவங்கினர்.


மேலும் சிலரோ ஒரு படி மேலே போய், உங்கள் முதல் கணவருக்கு பிறந்த மகன் எப்படி அர்ஜுன் கபூரை போல இருக்கிறார் என சர்ச்சையான முறையில் கேள்வி எழுப்பி நடிகையை திக்கு முக்காட செய்து விட்டனர்.

   
Disqus Comments
'