சரவணன் மீனாட்சி தொடரின் மைனாவாக ரசிகர்களிடன் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவரது காதல் கணவர் சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்டு மர்மமான முறையில் இறந்திருந்த நிலையில்,
அவர் உயிருடன் இருந்த போதே வேறு ஒரு நபருடன் காதல் வசப்பட்டதை வெளிப்படையாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ஒருவருடத்திற்கு மேலேயும் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவலையும் பகிர்ந்து இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலர், கணவர் இறந்தே ஒருவருடம் தான் ஆகிறது, அதெப்படி ஒருவருடத்திற்கு மேலே காதலிக்கிறீர்கள் என கேள்வி எழுப்ப, கணவர் இருப்பதற்கு முன்பு ஆறுமாத காலம் எந்த வித தொடர்பும் இன்றி பிரிந்திருந்தோம், திருமண வாழ்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை.
ஒரு பெண்ணாக எனக்கும் உணர்ச்சிகள் இருக்காதா? என பதிலளித்து, சர்ச்சையான இந்த காதல் குறித்து வெளிப்படையாயாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Social Plugin