நடிகை காஜல் அகர்வால் அம்மன் வேடத்தில் தோன்றி இருக்கும் புகைப்படம் ஒன்று, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துவங்கி இருக்கிறது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் கோமாளி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று வெளியானது.
சிவப்பு நிற உடையில், அழகு பதுமையாக மெல்லிடையை காட்டி காஜல் அகர்வால், அம்மனாக அதில் தோன்றி இருக்க, 'ஹிந்து மதத்தை இழிவு படுத்துவது போல அந்த புகைப்படம் உள்ளதாக' பலர் விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.
இந்த பிரச்சனை மேலும் பெரிதாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெகட்டிவ் விளம்பரமும் இப்படத்தை அதிக அளவில் பிரபலப்படுத்தலாம் என்ற பேச்சும் திரைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது.
Social Plugin