Ad Code

Responsive Advertisement

ஆட்டைய போடும் இயக்குனருக்கு இம்புட்டு மவுசா..? வரிசையில் நிற்கும் அரசியல்வாதிகள்


அந்த படத்தில் கொஞ்சம் இந்த படத்தில் கொஞ்சம் என, கதையை லாவகமாக லவட்டுவதில் வல்லவர் இந்த இயக்குனர்.

என்னதான் லவட்டினாலும் ஹிட் கொடுத்து விடுவதால், முன்னணி இயக்குனர்களின் லிஸ்டில் உச்சத்தில் இருக்கிறார் இந்த சுட்ட இயக்குனர். போதாத்தைக்கு, நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு, காஸ்ட்லீ வாழ்க்கை, பாதுகாவலர்கள் என ஓவர் சீன் போடும் இவரை, மேலும் உசுப்பேற்றி விட்டிருக்கின்றனர் இயக்குனர் ஆக துடிக்கும் இளைஞர்கள் பலர்.

ஆம் இயக்கினால் இவர் போல தான் இயக்க வேண்டும் என, இயக்குனரின் தொழில் ரகசியம் அறிய துடிக்கும் இளைஞர்கள் பலர், இவரிடம் உதவி இயக்குனராக வரிசையில் நிற்கின்றனராம்.

இதில் பெரும்பாலானவர்களுக்கு IAS, IPS, அரசியல்வாதிகள் என பெரும்புள்ளிகளின் பரிந்துரை இருக்கிறது என்பது மேலும் கொடுமை. இதனை கண்ட திரையுலகினர் பலர், 'இவரை சும்மாவே கையில பிடிக்க முடியாது இனி என்னல்லாம் நடக்க போகுதோ?' என தலையில் அடித்து கொள்கின்றனராம்.