Ad Code

Responsive Advertisement

எடுபட்ட அரசியலால் இருந்ததும் போச்சே..! கதறும் முன்னணி நடிகர்


அரசியல் ஆர்வத்தில் திரைத்துறையை தலைமுழுகி முழு நேர அரசியல்வாதியாக திட்டமிட்டிருந்த அந்த முன்னணி நடிகருக்கு கிடைத்திருப்பதோ ஏமாற்றம்தான்.

'இதன் பின்னர் நடிக்க மாட்டேன்' என அவரசப்பட்டு வாய்விட்டு வருந்திய அவர், ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி இருந்தார். இப்படி இருக்க அரசியல் மேடை பேச்சுக்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் இவரது படங்களை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

எங்கே இவரை வைத்து படம் எடுத்தால், ரிலீஸின் போது தியேட்டருக்கு கொடியுடன் கும்பல் கிளம்பி வந்துவிடுமோ என அஞ்சிய அவர்கள், 'ஆள விடுப்பா சாமி' என தலைதெறிக்க ஓட்டம் பிடித்துவிட்டனர்.

இதனால், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, அரசியலை நம்பி திரையுலகை கோட்டைவிட்டு விட்டேனோ என நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பி வருகிறாராம் நடிகர்.