பாதி இந்தியா ஏழ்மையில் தவித்து கொண்டிருக்கும் நிலையில், தங்களின் பொழுது போக்கிற்காக கோடிகளை வீண் செலவு செய்யும் கோடீஸ்வரர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வீண் செலவு செய்து தலைப்பு செய்தியாகிய தொழிலதிபர் ஒருவர், மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார். உத்தரகாண்ட் பகுதியில் பிரபலமான தொழில் அதிபர் குப்தா.
பெரும் கோடீஸ்வரரான இவரது வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு, சிறப்பு விருந்தினராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் அழைக்கப்பட்டு இருந்தார்.
குறிப்பிட்ட நிகழ்வில் நடனமும் ஆடி இருந்த அவர், அதற்கு சம்பளமாக சுமார் 2 கோடி ரூபாயை பெற்றிருக்கிறாராம். இவ்வாறு ஒரு படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை வெறும் 5 நிமிட நடனத்திலேயே சம்பாதித்து விட்ட இவரது சாமர்த்தியம் பற்றி ஒரு புறம் பேசப்பட்டாலும், 2 கோடி ரூபாயை ஒன்றும் இல்லாதது போல அள்ளிவீசிய தொழில் அதிபர் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
Social Plugin