சண்டிகரில் தனியார் பேருந்து ஒன்று, 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19ம் தேதி, சண்டிகரை சேர்ந்த குல்லு நகரத்தில் இருந்து, 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'கடா குசானி' எனும் பகுதியை நோக்கி 70 பயணிகளுடன் மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றது.
ஓட்டுநர் படுவேகத்தில் பேருந்தை இயக்கியதாக சொல்லப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 500 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு ஆளானது.
இந்த கோர விபத்தில் 44 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டதால் மேலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர்.
Social Plugin