Breaking News

சற்றுமுன் : காமெடி நடிகர் கிரேசி மோகன் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்


பிரபல சின்னத்திரை வெள்ளித்திரை காமெடி நடிகரும், ரஜினி கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல் நல குறைவால் மரணமடைந்து விட்டார் எனும் செய்தி திரையுலகை ஆட்டிப்படைத்து உள்ளது.

பஞ்ச தந்திரம், அருணாச்சலம், அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா மாஸ் MBBS என வரலாற்று சிறப்பு மிக்க படங்களுக்கு வசன கர்த்தாவாக இருந்தவர் கிரேசி மோகன்.

சில மாதங்களாகவே தொடர்ந்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி மறைந்த தகவல் காட்டு தீயைப்போல பரவி வருகிறது.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.