Ad Code

Responsive Advertisement

அவருக்கு இருந்த ஒரே பிரச்சனை கண்பார்வைதான்.. கிரேஸி மோகன் மறைவால் ஆடிப்போன ஆர்த்தி


நடிகர், வசனகர்த்தா, நாடக இயக்குனர் என பல அவதாரங்களை கொண்ட கிரேசி மோகன் அவர்கள் இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்தார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில், நாளை இறுதி சடங்குகள் நடைபெற உள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் எஸ்.வி. சேகர் அவர்கள், இன்று காலையில் கூட அவர் நலமாக இருந்ததாகவும், 'நேரம் வந்தால் போய் சேர வேண்டியதுதான்' என மரணம் குறித்து விளையாட்டாக பேசிய தகவலையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இவரை அடுத்து காமெடி நடிகை ஆர்த்தியும், 'சில நாட்களுக்கு முன்பு தான் அவரை சந்தித்ததாகவும், முழு நலனுடன் இருந்த அவருக்கு கண்பார்வை மட்டும் தான் பிரச்சனை, வாழ்க்கை யூகிக்க முடியாதது' என வருத்தத்துடன் அவரது மறைவு குறித்து பதிவிட்டு இருக்கிறார்.