Tuesday, 11 June 2019

எனக்கு இளம் நடிகைகள் தான் வேணும்... அடம் பிடிக்கும் 50 வயது நடிகர்


அறிமுகமான புதிதில் சாக்லேட் பாயாக, தமிழ் சினிமா ரசிகைகள் மனதில் குடி கொண்டவர் அந்த நடிகர். கிட்டத்தட்ட 50 வயதை தொட்டு அரைக்கிழவன் ஆகிவிட்ட நிலையிலும், இளம் நடிகைகள் தான் வேண்டும் என அடம்பிடித்து படக்குழுவினரை படாத பாடு படுத்துகிறாராம்.

குடும்ப பிரச்சனைகள் காரணமாக பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தவரான அந்த நடிகர், நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் அசத்தி தற்பொழுது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

முன்பு போலவே சாக்லெட் பாய் போல தோன்றமளிக்க விரும்பும் அவர், தனது வயதை குறைத்து காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், 18 வயதான இளம் நடிகைகளை ஒப்பந்தம் செய்ய சொல்லி அடம்பிடிப்பதாக கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.
Disqus Comments
'