Ad Code

Responsive Advertisement

ஞாயிறு விருந்தாக நீங்கள் வேணும்..! சின்மயியை படுக்கைக்கு அழைத்த நபரால் பரபரப்பு


சமூக வலைத்தளங்களிலும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. #METOO போன்ற இயக்கங்கள் மூலமாக பலரது முகத்திரைகள் கிழிக்கப்பட்டாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை.

இந்நிலையில், #METOO எனும் ஒன்றை ஓட்டுமொத்த தமிழகத்துக்கே பிரபலப்படுத்திய பாடகி சின்மயியே தான் ஆன்லைன் சில்மிஷங்களை ஆளானது குறித்து பகிர்ந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

வைரமுத்து உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களின் பாலியல் குற்றங்கள் குறித்து பேசி, பரபரப்பை கிளப்பி இருந்த இவருக்கு, பாராட்டுகளும் அதே சமயம் எதிர்ப்புகளும் எழுந்து இருந்தது.

மேலும் இவ்வளவு, தைரியமான பெண்மணியான அவரையே இளைஞர் ஒருவர், தகாத வார்த்தைகள் பேசி உறவுக்கு அழைத்த உரையாடல் பதிவுகளை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறார்.



மேலும் இதுபோன்றவர்களின் மீது நடவடிக்கை எடுக்க, ட்விட்டர் போன்ற  சமூக வலைத்தளங்கள், அவர்களின் தகவல்களை தர முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து இருக்கிறார்.