Ad Code

Responsive Advertisement

பிகில் : 'விக்கிபீடியா'வையும் விட்டுவைக்காத அட்லீ..! எவ்ளோ நாசுக்கா சுட்டுருக்காரு பாருங்க


இயக்குனர் அட்லீ என்றாலே கதை திருட்டு என்றாகிவிட்ட அளவிற்கு கதை திருட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் கூட, 'சக்தே இந்தியா' எனும் பாலிவுட் திரைப்பட தழுவல் என்ற விவகாரம் ஒருபுறம் இருக்க, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் எழுந்துள்ளது திருட்டு சர்ச்சை.

நடிகர் விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று அத்திரைப்பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பிரமாண்டமாக ஒருபுறம் கொண்டாடி வர, வழக்கம் போல உளவு வேலைகளை பார்க்க துவங்கி இருந்தது ஒரு தரப்பு.

அதன் ரிசல்டாக, விஜய் கொடுத்திருக்கும் போஸ், தேவர் மகன் திரைப்படத்தில் இருந்து சுட்டது, பின்னணி காலா படத்தில் இருந்து சுட்டது என வரிசையாக ஒப்பிட்டு வந்தனர்.

இதென்னடா சின்னப்புள்ள தனமா இருக்கு என இந்த ஒப்பீடுகள் சொல்ல வைத்தாலும், போஸ்டரில் இடம் பெற்றிருந்த 'பயிற்சியாளர்' என்பதை விளக்கும் படியான வாக்கியம்,  அப்படியே விக்கிப்பீடியாவில் இருந்து சுடப்பட்டத்தையும் கண்டறிந்து கிண்டல் செய்ய துவங்கி இருக்கின்றனர்.