Ad Code

Responsive Advertisement

மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்..! எகிறிப்போன 'பிகில்' திரைப்படத்தின் விலை..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் படக்குழு


பிகில் திரைப்பட பர்ஸ்ட் லுக்கிணை உலக அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, இத்திரைப்படத்தின் மதிப்பினை மேலும் உயர்த்தி படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது.

விஜயின் 63வது திரைப்படமாக அட்லீ இயக்கத்தில் பிகில் உருவாகி வருகிறது, அப்பா மகன் என இரு வேடங்களில் விஜய் மிரட்ட இருக்கும் இத்திரைப்பட பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இதனால் சமூக வலைத்தளங்கள் விழா கோலம் பூண்டிருக்க, எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக ரசிகர்கள் பிகில் திரைப்பட போஸ்டரை ட்ரென்ட் செய்தனர்.

கூடவே விஜயின் பிறந்தநாள் டாக்கும் ட்விட்டரில் உலக அளவில் பேசப்பட, விஜய்க்கு அதிகரித்து இருக்கும் ரசிகர்களின் மவுசை கண்டு பல விநியோக நிறுவனங்கள் இத்திரைப்படத்தை வாங்க போட்டி போட துவங்கியுள்ளன.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்த உரிமை, 75 கோடி வரை போகும் என பேசப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது நிலவு கடும் போட்டியினால் 80 கோடி வரை பிகில் திரைப்படம் விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.