Ad Code

Responsive Advertisement

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை...? ஆரம்பமே கிளம்பிய பூகம்பம்..!


பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பின்பு தான் பல பிரச்சனைகள் கிளம்புகிறது என்று பார்த்தால், அதன் மூன்றாவது சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே தற்பொழுது பிரச்சனை வெடித்துள்ளது.

அமெரிக்க டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்றாலும் அதில் பிரபலங்கள் நடந்து கொள்ளும் முறை விமர்சனங்களுக்கு ஆளானது.

இதனால் பல தரப்பினர் கண்டனங்கள் தெரிவிப்பது வழக்குகள் தொடுப்பது என இந்நிகழ்ச்சியை தடை செய்ய கோரி எழுந்த ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டது இதனை ஒளிபரப்பும் ஸ்டார் நெட்ஒர்க்.

இந்த தடைகளை தாண்டி மக்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் 23ம் தேதி மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்நிலையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி எந்த வித சமூக அக்கறையும் இன்றி இளைஞர்களை சீரழிக்கும் முறையில் ஒளிபரப்படுவதாகவும்,

இதனால் சென்சார் விதிகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்ப அதற்கான முறையான சான்றிதழ் வாங்கும் வரை, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்து, சுதன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.   

இதனால் சொன்னபடி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்குவதால் ஸ்டார் விஜய் நிறுவனதிற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.