மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கியதுதான் தான் துவங்கினார், கமலின் ஒவ்வொரு செய்கையிலும் தற்பொழுது அரசியல் தென்பட துவங்கியுள்ளது.
ஒரு நடிகராக இருந்தவரை அரசியல்வாதியாக இளசுகளிடம் கொண்டு சென்ற பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சியை சேரும். இவரது பேச்சாற்றல் திறமையையும் அறிவுக்கூர்மையையும் பறைசாற்றும் ஒன்றாக இந்நிகழ்ச்சி அமைந்துவிட தொடர்ந்து மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்.
தொடர்புடையவை : 'பிக்பாஸ்' வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்..! நைசாக பயன்படுத்தி கொண்ட கமல்
இந்நிகழ்ச்சியின் புதிய சீசன் நேற்று முதல் ஒளிபரப்பான நிலையில், யார் யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என இத்தனை நாட்கள் இருந்த சஸ்பென்ஸ் உடைந்தது.
இது ஒரு புறம் இருக்க நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, அரசியல் பேச்சால் கைதட்டல்களை அள்ளினார் கமல். ஒரு குடிமகனாக அரசின் மீது உள்ள கோபம், ஊழல் என சிங்கள மொழியில் கேப்பே விடாமல் இவர் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Social Plugin