நடிகர் சங்க தேர்தல் ஏற்பாடுகள் ஒரு புறம் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது இயக்குனர் சங்க தலைவர் தேர்ந்தெடுப்பு.
தமிழ் சினிமா இயக்குனர் சங்க தலைவராக, இயக்குனர் விக்ரமன் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆலோசனை கூட்டம் வடபழனியில் நேற்று நடைபெற்ற நிலையில், சங்கத்தின் அடுத்த தலைவராக இயக்குனர் பாரதி ராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயக்குனர் சங்கத்தின் பிற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'இயக்குனர் சங்க தலைவர் எனும் முறையில் எதையாவது சாதிக்க விரும்புகிறேன்' என பாரதி ராஜா தனது வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
Social Plugin