தளபதி 63 படத்திற்காக ரா பகலாக தூக்கம் இன்றி உழைக்கிறாராம் இயக்குனர் அட்லீ.
விஜய்-அட்லீ வெற்றி கூட்டணியில் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீசுக்காக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் கடைசி கட்ட படப்பிடிப்புகள் சென்று கொண்டிருக்கிறது.
படம் ஆரம்பித்தது முதல் இன்று வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் இயக்குனர் அட்லீ, படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் துவங்கியது முதல் படப்பிடிப்பு தளம், ஆஃபிஸ் என வீட்டிற்கு கூட செல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறாராம்.
இதனை கேள்விப்பட்ட அதிர்ந்த நடிகர் விஜய், 'வேலை முக்கியம் தான், ஆனால் உடலையும் கொஞ்சம் பாத்துக்கோங்க' என அட்வைஸ் செய்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Social Plugin