Friday, 14 June 2019

வேலைக்காரர் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற அமிதாப்..! நெகிழ வைத்த சம்பவம்

Amithap-at-his-servent-funeral

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மறைந்த தனது வீட்டு பணியாளர் உடலை சுடுகாடு வரை தூக்கி சென்ற சம்பவம் பலரையும் சோகத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சினிமாவின் உச்ச நச்சத்திரம் எனும் அந்தஸ்தை உடைய மூத்த நடிகர் அமிதாப்பச்சன். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர் ஷித்தல். சில நாட்களுக்கு முன்பு இவர் உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவரது இறுதி சடங்களில் கலந்து கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மகன் அபிஷேக் பச்சன். அவரது உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர்.

தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்ற எண்ணம் கொண்டு கடைமைக்கும் மட்டும் கலந்து கொள்ளாமல், ஒரு குடும்ப உறுப்பினரை போல தனது பணியாளரின் உடலை அவர் சுமந்து சென்றது, பலரையும் நெகிழ வைத்துள்ளது.  
Disqus Comments
'