Ad Code

Responsive Advertisement

சென்னையில் எடுபடாத அஜித்தின் பாச்சா... உச்சம் தொட்ட ரஜினி-விஜய்


தமிழக அளவில் அதிக திரையரங்குகள் உள்ள நகரம் என்றால் அது சிங்கார சென்னை தான். ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து அனைத்து மத, மொழி மக்களும் இங்கு வசிப்பதால் தெருவுக்கு தெரு திரையரங்குகள் உள்ளன.

இதன் காரணமாக கோடிகளை கொட்டி கொடுக்கும் தங்க சுரங்கமாக சினிமா காரர்களுக்கு சென்னை காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தமிழ் சினிமாவில் யாரது படங்களுக்கு அதிக மவுசு உள்ளது என்கிற கருத்து கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது.

இதன்படி, இதுவரை வெளியான திரைப்படங்களின் முதல்வார வசூல் கணக்கிடப்பட்டது டாப் 10 பட்டியலும், இணையதளம் ஒன்றினால் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் படி முதல் 4 இடங்களை ரஜினி, விஜயே பிடித்து விட, நடிகர் அஜித்தோ 5 வது இடத்தில் இடம்பெற்று இருப்பது, பிறரை ஒப்பிடும் போது அவரது படங்களுக்கு சென்னையில் வரவேற்பு குறைவுதான் என பேசவைத்துள்ளது.

#2Point0 : 13.64 Cr •#Sarkar : 11.23 Cr •#Petta : 8.75 Cr •#Kaala : 8.24 Cr •#Viswasam : 6.9 Cr •#CCV : 5.83 Cr •#Vishwaroopam2 : 4.78 Cr •#TSK : 4.34 Cr •#Kanchana3 : 4.22 Cr  #NGK : 4.21 Cr