Saturday, 1 June 2019

அரசியலில் தல அஜித்??? பாண்டே வெளியிட்ட அதிரடி தகவல்


ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அரசியலில் களம்கண்டு விட்டனர். நடிகர் விஜயும் அரசியலை ஒரு கை பார்க்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், சத்தமே இல்லாமல் பலருக்கு உதவி செய்து வரும் அஜித்தும், அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் அஜித்தோ, 'எனக்கும் அரசியலுக்கும் இடையேயான பந்தம் ஓட்டு போடுவதோடுமுடிந்து விட்டது', என ஒரே போடாக போட்டிருந்தார். இந்நிலையில், அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் நடித்திருக்கும் பிரபல பேச்சாளர் ரங்கராஜ் பாண்டே, அஜித்தின் அரசியல் பார்வை குறித்து பேசி இருக்கிறார்.

அதில், 'அஜித்துக்கு மிக மிக தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது. ஆனா ஆசை இல்லை. எந்த கட்சி எப்படி செயல்படுகிறது?, யார் எப்படி செய்யப்படுகிறார்கள்?, மக்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?' என அரசியல் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் மிக உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்' என அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, அதிரடி கதையை தவிர்த்து, தல 60 திரைப்படத்தின் சமூக அக்கறை கொண்ட ஒருவராக நடிக்க இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து இருப்பது, அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து பரவலாக பேசப்பட வைத்துள்ளது.





Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();