தமிழ் சினிமாவில் எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் அஜித். இதுவே அவரது அடையாளமாகவும் இருந்து வரும் நிலையில், அஜித் பற்றி எதிர்மறையாக பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நடிகர் பப்லூ.
90களில் வில்லன் வேடங்களில் நடித்து அசத்தியவர் பப்லூ பிரிதிவிராஜ். அவள் வருவாளா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த இவர், அஜித், சூர்யா பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஜித்,சூர்யா பற்றி பேசிய அவர், 'அஜித்துக்கு நடிப்பதில் ஒரு டெடிகேஷனே கிடையாது. ஏனோ தானோ என நடிக்கும் அவர், திரைத்துறையில் இப்பொழுது உச்சத்தில் இருக்க முழுக்கு முழுக்க அதிர்ஷ்டமே காரணம்' எனவும், சூர்யா கொடூரமான நபர், சுயமையம் கொண்டவர். அவரது நேரம் தமிழ் சினிமாவில் முடிந்தது' என பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இவரது இந்த கருத்து கண்டு கொந்தளித்த ரசிகர்கள், சின்னத்திரை நாடங்கங்களில் கூட நேரத்திற்கு செல்லாமல் பிரச்சனை செய்த நீங்கள் அஜித், சூர்யா பற்றி பேசுவதா என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.
Social Plugin