Thursday, 20 June 2019

அஜித் பேச்சை கேட்டு நடந்த விஜய் ரசிகர்கள்..! ட்விட்டரில் நிகழ்ந்த சுவாரஸ்யம்


அஜித், விஜய் ரசிகர்கள் என்றாலே ஒருவர் செயலை மற்றொருவர் விமர்சிப்பவர்கள் என்பது மாறி அஜித் பேச்சை கேட்டு நடந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

வருகிற ஜூன் 21ம் தேதி நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனையொட்டி வழக்கம் போல, பிறந்தநாள் சிறப்பு புகைப்படம்  ஒன்றை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் சிலர் விஜயை கடுமையாக விமர்சிப்பது போன்ற தலைப்பில் அதிகம் பதிவிட துவங்கினர். இதனை கண்டு விஜய் ரசிகர்கள் ஆரம்பத்தில் கோபம் அடைந்தாலும்,


நாங்கள் உங்களை போல அல்ல, 'ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுவதற்காக பிறரை இழிவு படுத்தமாட்டோம்' என நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் பேசிய வசனத்தை குறிப்பிட்டு, அஜித் பற்றி நல்ல முறையில் பதிவிட்டுட்டு வருகின்றனர்.



Disqus Comments
'