திரைத்துறையில் இளம் நடிகைகள் பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சின்மயி, ஸ்ரீ ரெட்டி ஆகியோர் இக்குற்றங்களுக்கு எதிராக பலரது முகத்திரையை கிழித்து பதிலடி கொடுத்தாலும் இவை குறைந்த பாடில்லை.
இப்படி நாளுக்கு நாள் வரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கேட்பவர்களை குலைநடுங்க வைத்துள்ளது இளம் நடிகை ஒருவரின் குற்றச்சாட்டு.
மும்பையை சேர்ந்தவரான குறிப்பிட்ட மாடல் அழகி, சிறு சிறு விளம்பர படங்களில் நடித்தவர். ஃபேஷன் ஷோ ஒன்றில் இவருக்கு அறிமுகமான முத்ராசிங் எனும் தயாரிப்பாளர், திரைப்பட வாய்ப்பு தருவதாகவும் கதை டிஸ்கஷனுக்காக தனது அலுவலகதிற்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், நடிகையும் அவரது அலுவலகத்திற்கு செல்ல, உணவில் மயக்கமருந்து கொடுத்து, இரவு முழுவதும் தன்னை கற்பழித்ததாக நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்டவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நடிகையின் குற்றச்சாட்டு உண்மை என உறுதி செய்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Social Plugin