ஆடை படத்தில் நடிகை அமலாபால், ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திருமணம் விவாகரத்து என காலகாலமாக நாயகிகளுக்கு தடைக்கற்களாக இருந்தவற்றை தகர்த்து, இன்றும் முன்னணி நாயகியாக ஜொலித்து வருபவர் அமலாபால்.
இயக்குனர் விஜய் உடனான விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்றுவரும் இவர், தற்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடிப்பில் ஆடை எனும் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. மிகவும் சஸ்பென்ஸ் நிறைந்த ஒன்றாக உருவாகி உள்ள அந்த டீசரின் ஒரு காட்சியில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கிறார் அமலாபால்.
Social Plugin