உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி அவரை கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
திரைத்துறையில் பலர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. யார் சிக்குவார்கள் விமர்சிக்கலாம் என சர்ச்சையை எதிர் நோக்கி காத்திருக்கும் அவரிடம் இப்பொழுது சிக்கி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பாலிவுட் படம் ஒன்றிற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து அடையாளமே தெரியாமல் மாறி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் குறித்து பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி, 'விமானத்தில் என்னுடன் பயணித்த கீர்த்தி சுரேசை அடையாளம் காணவே முடியவில்லை. ரசிகர்கள் கூட என்னிடம் ஆட்டோ கிராப் வாங்குகிறார்களே தவிர அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவருக்கு நடிக்கும் திறமை கிடையாது அழகை வைத்துதான் சமாளித்து கொண்டிருந்தார். பாவம் இப்பொழுது அதுவும் போச்சு' என கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
Social Plugin