தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், நடிகர்-தயாரிப்பாளர் சங்கங்களில் முக்கிய பதவியிலும் இருப்பவர் நடிகர் விஷால். தற்பொழுது நடிகர் சங்க தேர்தல் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் விஷால் குறித்த பகிரங்க புகாரினை பதிவிட்டு இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீ ரெட்டி. இவர் அண்மையில் விஷால் குறித்த பதிவு ஒன்றினை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதில் 'விஷால் ஒன்றும் உத்தமர் இல்லை. அவரது படங்களில் நடிக்க பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறார். போதத்தைக்கு காசு கொடுத்து கூட பெண்களை வாங்குகிறார். அவருக்கு பெண்களை சப்ளை செய்வது யார் என்றும் எனக்கு தெரியும்.' என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
Social Plugin