நடிகை ஸ்ருதி ஹாசன் மார்க்கெட் போய் ஒரு திரைப்பட வாய்ப்பு கூட இல்லாமல் திண்டாடி வரும் நிலையில், ஹாலிவுட் பக்கம் திறந்திருக்கும் கதவால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி படி, உலக நாயகனின் மகளான ஸ்ருதி ஹாசனும், இசையமைப்பு, பாடல், நடனம், நடிப்பு என பன்முக திறமை கொண்டவர்.
ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு என கொடி கட்டி பறந்தவர் தற்பொழுது ஒரு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்காமல் திண்டாடி வந்தார். இந்நிலையில் அவருக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட் ஒன்று.
ஆம், அமெரிக்க வெப் சீரிஸ்களில் மிக பிரபலமான 'ட்ரெட்ஸ்டோன்' எனும் தொடரில், நடிக்கும் வாய்ப்பு அவரது இல்லம் தேடி வந்திருக்கிறது. அதில் ஜொலிக்கும் பட்சத்தில் ஹாலிவுட் படவாய்ப்பே கிடைக்கலாம் எனும் நிலையில், இப்பொழுதே அதற்கான பணிகளில் படுமும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
Social Plugin