சரவணா ஸ்டார் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சரவணன் அண்ணாச்சி இப்பொழுது திரைத்துறையில் அதிரடி நாயகனாக அடியெடுத்து வைத்து இருக்கிறார்.
தனது கிளையான, பாடியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா என உச்ச நடிகைகளுடன் தானே நடித்து கேலி கிண்டல்களுடன் பிரபலத்தையும் அள்ளியவர் சரவணன்.
இந்த பிரபலத்தால், 'சினிமாவில் நடிக்க போகிறீர்களா?' என்ற கேள்விகளையும் எதிர்கொண்ட அவர், ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின்னர், அஜித்தின் 'உல்லாசம்' திரைப்படத்தை இயக்கிய JD-ஜெர்ரி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சுமார் 30 கோடி பட்ஜெட்டில், ஆக்சனுடன் மக்களை சிந்திக்கவும் வைக்கும் திரைப்படமாகவும் இத்திரைப்படம் உருவாக உள்ளது. மேலும் பாலிவுட்டை சார்ந்த கவர்ச்சி நடிகை ஒருவரும் இத்திரைப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக இருப்பது கூடுதல் தகவல்.
Social Plugin